#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உலக ரசிகர்களுக்கு பிடித்த இந்திய வீரர் யார் தெரியுமா? காரணத்தையும் தெரிவித்துள்ள ஷேன் வார்னே.!
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார் விராட் கோலி. இந்திய அணிக்காக 20 வயதில் 2009 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார் விராட்.
மிக விரைவில் பல சாதனைகளைப் படைத்து வரும் கோலி கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் அளவிற்கு சிறப்பாக ஆடி வருகிறார். இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 25 சதங்களுடன் 6616 ரன்களும், 219 ஒருநாள் போட்டிகளில் 37 சதங்களுடன் 10385 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட மற்றும் ஒருநாள் பேட்ஸ்மன்களின் தரவரிசை பட்டியலில் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகிறார் கோலி. இந்நிலையில் இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் அடையாத சாதனையை கூட கோலி பெற்றுள்ளார். அதாவது ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சிறந்த வீரருக்கான மூன்று விருதுகளை ஒரே சமயத்தில் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஷேன் வார்ன் சமீபத்தில் பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அதில் இந்திய கேப்டன் விராட் கோலியை ஏன் அனைவருக்கு பிடித்துள்ளது என்பது குறித்து தெரிவித்தார்.
இதுகுறித்து வார்ன் கூறுகையில், ‘ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே விராட் கோலியை பிடித்துள்ளது. அதற்கு அவர் எதையும் மறைக்காமல் அவர் மனதில் தோன்றுவதை பேசுகிறார். இது இன்று பலரிடம் இல்லாத குணம் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு அவரிடம் பிடித்த குணம் இதுதான்.’ என்றார்.