#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
WWE வீராங்கனை; ரசிகர்களின் நாயகி சாரா லீயின் உடல்நலக்குறைவால் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்.!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரிடமும் தீராத ஆசையையும், அதிக கவனத்தையும் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று WWE குத்துசண்டை. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள பல வீரர்-வீராங்கனைகளுக்கு உலகங்களும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த போட்டியில் கலந்துகொண்ட குத்துசண்டை வீராங்கனை சாரா லீயின். அவருக்கு வயது 30. இவர் சைனஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவருக்கு அதிகளவு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தன்னால் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் அளவு உடலில் திடம் இருப்பதாக இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டவர், இன்று திடீரென இயற்கை எய்தினார். அவரின் இறப்பை குடும்பத்தினர் உறுதி செய்தனர். இது WWE ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.