#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மச்சகாரன்யா.. மூன்று சகோதரிகளை மணந்த இளைஞன்.! என்னம்மா பிளான் போட்டு குடும்பம் நடத்துறாரு பார்த்தீங்களா..!
இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் ஒரு நபர் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் கென்யாவில் இளைஞர் ஒருவர் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கென்யா நாட்டில் வசித்து வருபவர்கள் கேட், ஈவ் மற்றும் மேரி சகோதரிகள். அவர்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள்.
அவர்கள் கென்யாவில் இசைத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களில் கேட் என்பவர் ஸ்டீவோ என்ற இளைஞரை சந்தித்துள்ளார். அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஸ்டீவோ கேட்டின் மற்ற சகோதரிகளையும் சந்தித்து நெருங்கி பேசியுள்ளார்.
அப்பொழுது அவர், தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என எண்ணி மூன்று சகோதரிகளையும் தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஸ்டீவோ கூறுகையில், 3 பேருடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களுடன் சமமாக நேரத்தை செலவிட்டு தேவைகளை திருப்திப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் அதற்காக அவர் பெரிய அட்டவணையை தயார் செய்து, திங்கட்கிழமை மேரி செவ்வாய்கிழமை கேட், புதன்கிழமை ஈவ் என பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து மூன்று சகோதரிகளும் கூறுகையில், நாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள். வேறொரு பெண்ணை எங்களது வாழ்க்கைக்குள் கொண்டு வர அவரை அனுமதிக்க மாட்டோம் என ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளனர்.