#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்தரத்தில் பறந்த விமானத்தில் நிர்வாணமாக ஓடிய இளைஞன்!. பதறிப்போன பயணிகள்!.
துபாயில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமானத்தில் பயணி ஒருவர் அருவருப்பான செயலை செய்துள்ளார். அந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த இளைஞர் அவரது ஆடைகளை அவிழ்த்துவிட்டு பயணிகளின் இருக்கைகளுக்கு இடையே ஓடி நடந்துள்ளார்.
அதனை பார்த்த சக பயணிகள் முகம் சுழித்தனர், மேலும் அந்த இளைஞரின் செயலை கண்டு ஆத்திரம் அடைந்தனர் . பலமுறை எச்சரித்தும் அந்த இளைஞன் கேட்காததால், ஒரு போர்வையைக் கொண்டு அந்த நபரை போர்த்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 150 பயணிகளின் முன்னிலையில் அந்த நபர் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடி அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளார். பின்னர் லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.