ஓடும் ரயிலில் சுருண்டுவிழுந்து இளைஞன் கூறிய ஒத்த வார்த்தை! அலறியடித்து தலைதெறிக்க ஓடிய பயணிகள்! வைரலாகும் ஷாக் வீடியோ!



youngman-prank-using-coronovirus-in-train

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலால் 900க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40000க்கும் அதிகமான பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல நாட்டினரும் அவர்களது சொந்த தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் உலக  நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. 

இந்நிலையில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி ரயிலில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோ சுரங்க  ரயிலில் மாஸ்க் அணிந்து நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு கீழே விழுகிறார். மேலும் கடுமையான வலியுடன் துடிதுடிக்கிறார். அவரது  நிலையை கண்ட சிலர் அவரை காப்பாற்ற பக்கத்தில் செல்கின்றனர். ஆனால் அவர் கொரோனா வைரஸ் என கத்தியுள்ளார். 

mascow train

 இதில் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் போலிசாரும் இது மிகப்பெரும் குற்றமாகும்.இவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தாமாக வந்து அந்த இளைஞன் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.மேலும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.