#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விமான சக்கரத்தில் அமர்ந்து உல்லாச பயணம் செய்த இளைஞர்கள்... உடல் நசுங்கி பலியான சம்பவம்..!
வடஅமெரிக்காவின் கொலம்பியாவில் பொகோட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு சிலி நாட்டின் ஏவியன்கா விமானம் ஒன்று தரையிறங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.
இதனையடுத்து விமான ஊழியர்கள் விமானத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் முன்பக்க சக்கரத்தில் மனித உடல்கள் இரண்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த அதிகாரிகள் விமான சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விசாரணையில் அந்த 2 இளைஞர்கள் சட்டவிரோதமாக விமானத்தின் முன் சக்கரத்தில் அமர்ந்து பயணம் செய்த போது உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் இளைஞர்களிடம் இருந்த ஆவணங்களை வைத்துப் பார்க்கையில் அவர்கள் இருவரும் டொமானிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.