"நாம சும்மா இருந்தாலும், நம்ம நேரம் நமக்கு முன்னே போகுமாம்" - இதுதானா அதற்கு அர்த்தம்?..! வைரல் வீடியோ.!



trending-video-about-old-man-injury

நமது ஊர் வழக்கத்தில் நாம் அமைதியாக இருந்தாலும், நமது நேரம் நம் முன்னே செல்கிறது என கூறுவார்கள். இதன் அர்த்தம் நாம் அமைதியாக செல்லும்போது கூட, நமது நேரத்தின் கீழக நிலையால் நாம் சில இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

இந்த நிலையில், வணிக நிறுவனத்தில் தனது செல்போனை பார்த்தவாறு முதியவர் இருந்தார். அந்நிறுவனத்தின் பணியாளர் இரும்பு கம்பியை கடையின் நடுவே வைத்து சென்றார். 

அது சரிவர நிற்கவில்லை என தெரிகிறது. இதனால் சற்றும் எதிர்பாராத விதமாக கம்பி முதியவரின் கால்களில் விழுகிறது. அந்த கம்பியை எடுத்த அதே பணியாளரும், மீண்டும் அதனை அங்கேயே வைக்கிறார். 

இப்போது, முதியவர் கால் வலியால் தனது கால்களை தடவிகொடுத்துக்கொண்டு இருந்தபோது, அவரின் தலையிலேயே கம்பி விழுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. நல்ல வேலையாக பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை.