மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேஜிக் செய்யும் முருங்கைக்கீரை பொடி.. இப்படி செய்து வைத்துக்கொண்டால் எப்போதும் பயனளிக்கும்.!
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் புரோட்டீன், காப்பர், சோடியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் உள்ளது. ஆனால், இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை நம்மில் பலரும் சாப்பிடுவது கிடையாது. குறிப்பாக, குழந்தைகளை சாப்பிட வைப்பது மிகவும் கடினம். ஆகையால், அனைவரும் விரும்பும் சுவையில் முருங்கைககீரை பொடி செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுந்து - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த முருங்கைக்கீரை - 1 கப்
கருவேப்பிலை - 2 கொத்து
பூண்டு - 15 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
தனியா - 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
புளி - சிறிது
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். பின்பு, அதில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி வெள்ளை உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் 1 கப் காய்ந்த முருங்கைக்கீரையை சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: முருங்கைக் கீரையுடன் முட்டை.. இப்படி பொரியல் செய்தால்.. எல்லோருக்கும் பிடிக்கும்.!
அதன் பின்பு, மற்றொரு வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கருவேப்பிலை, பூண்டு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, வெள்ளை எள், புளி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது வறுத்து எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒரு மிக்சி கப்பில் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு, அரைத்த முருங்கைக்கீரை பொடியில் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது இந்த முருங்கைக்கீரை பொடியை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். மேலும் இந்த முருங்கைக்கீரை பொடி இரத்த சோகையை நீக்கி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: நாய்கள் இதனால், தான் செருப்புகளை கடித்து வைக்கிறதா.?! இது தெரிஞ்சா இனி அடிக்கவே மாட்டீங்க.!