தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்.! அதிர்ச்சியில் மக்கள்.!



gold-price-sky-rocketed-people-are-in-shock

உலக நாடுகளின் பொருளாதாரம் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் தங்கம் முக்கிய ஆபரணமாக இருக்கிறது. விசேஷ காலங்களிலும் திருமணம் போன்ற சடங்குகளிலும் தங்க நகைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

Gold priceசம்பிரதாயங்களுக்காக தங்கத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது பாதுகாப்பாக இருப்பதோடு அதிக லாபம் தரும் முதலீடாகவும் இருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து ஏழு முகமாக இருந்து வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு இருக்கிறது.

Gold priceஇன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ.49,200/--க்கு விற்கப்படுகிறது. கிராம ஒன்றுக்கு 45 ரூபாய் உயர்ந்து  ரூ.6,150./- க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விளையும் 20 காசு ஏற்றம் கண்டிருக்கிறது  ஒரு கிராம் வெள்ளி  ரூ.79.20/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை முதல்முறையாக 49 ஆயிரம் ரூபாயை கடந்து இருக்கிறது. இது வரலாறு காணாத விலை ஏற்றம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.