நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!



good-news-for-people-as-gold-price-falls-down

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய தங்கமாகும். தங்கத்தின் விலை மதிப்பை பொறுத்துதான் அந்த நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா போன்ற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமிக்க நாடுகளில் தங்க ஆபரணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Gold price decreaseஆடம்பரம் மற்றும் அழகுப் பொருள்களாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வியாபார ரீதியாகவும் தங்கத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெருமளவில் தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் மக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக தங்கத்தின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது .

Gold price decreaseகடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது திடீர் சரிவை சந்தித்து இருக்கிறது. இன்று மட்டும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் குறைந்து 48.880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 6,110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.