"ஏண்டி லேட்டா வந்த.. " மகளின் உயிரை பறித்த கேள்வி.!! 20 வயது மாணவி தற்கொலை.!!
திருவொற்றியூர் அருகே 20 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
திருவொற்றியூர், கம்பர் தெருவில் வசித்து வருபவர் அமிர்தவர்ஷினி. 20 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் தனது தோழியின் வீட்டிற்கு சென்று அவருடன் நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தனது தோழி வீட்டிற்கு சென்றருக்கிறார் அமிர்தவர்ஷினி.
கண்டித்த தாய்
இந்நிலையில் அமிர்தவர்ஷினி வீடு திரும்புவதற்கு நேரமாகி இருக்கிறது. இதான் காரணமாக அமிர்தவர்ஷினியின் தாய் அவரை கடுமையாக கண்டித்திருக்கிறார். இது அமிர்தவர்ஷினியை கடும் மன உளைச்சளுக்கு ஆளாக்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டிருக்கிறார் அமிர்தவர்ஷினி.
இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!
மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை
இதனைத் தொடர்ந்து வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார் அமிர்தவர்ஷினி. இந்நிலையில் வீடு திரும்பிய பெற்றோர் தங்களது மகள் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டீ இல்லை., தின்பண்டத்துக்கு காசு கொடுக்கணுமா? - பேக்கரி கடையில் சரமாரி தாக்குதல்., போதை கும்பலை கையும் களவுமாக பிடித்த போலீஸ்.!