கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
விபரீதத்தில் முடிந்த சமூக வலைதள நட்பு.!! 23 வயது பெண் பாலியல் பலாத்காரம்.!! 68 வயது முதியவர் கைது.!!
கோவை அருகே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 68 வயது முதியவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் பழக்கம்
கோவை மாநகரத்தில் ஐஓபி காலனி திரு.வி.க நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். 68 வயதான இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான 23 வயது இளம் பெண்ணுடன் சமூக வலைதளம் மூலமாக இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் செல்போனிலும் பேசி வந்திருக்கின்றனர்.
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்
இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இளம் பெண்ணிடம் சந்திக்கலாம் என கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் சந்தித்துள்ளனர். மேலும் தனது வீட்டை பார்த்துவிட்டு அதனை நவீனப்படுத்தி கட்டித் தருமாறு இளம் பெண்ணிடம் கேட்டிருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து முதியவரின் வீட்டிற்கு இளம் பெண்ணும் சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆளில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முதியவர் தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பி 4 லட்ச ரூபாய் பறிப்பு.!! பயிற்சியாளர்கள் மீது பரபரப்பு புகார்.!!
காவல்துறையில் புகார்
மயக்கம் தெளிந்த பின் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் காவல்துறையினர் மெத்தன போக்கை கடைபிடித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இளம் பெண் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட முதியவர்
இதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை தேனியில் தலைமறைவாக இருந்த முதியவர் ஆனந்த கிருஷ்ணனை கைது செய்துள்ளது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணியின் மீது பாய்ந்த கொழுந்தன்... எமனாக மாறிய அண்ணன்.!! கொலையில் முடிந்த தகராறு.!!