மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹனிமூன் புகைப்படம்: மனைவியின் அழகை நேர்த்தியாக படம் பிடித்து அசத்தியுள்ள நடிகர் ஆர்யா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் திருமணம் எப்போது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கேட்டுவந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
ஆர்யாவின் திருமணம் சென்னையில்தான் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் இருந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில், தற்போது இருவரும் தேனிலவு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சாயிஷா பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கும் சாயிஷாவை ஆர்யா புகைப்படம் எடுத்துள்ளார்.
Soaking in the sun with my love! ☀️
— Sayyeshaa (@sayyeshaa) March 21, 2019
Pic courtesy- Husband @arya_offl 😘😘😘#honeymoon pic.twitter.com/FNjYBVG3eY