ஏகே 62 படத்தில் நடிக்க சொன்ன அஜீத்! சந்தானம் சம்மதித்தாரா?? லேட்டஸ்ட் தகவல்..



actor-ajith-ask-santhanam-to-act-in-his-ak-62-film

துணிவு படத்தை தொடர்ந்து  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் தல அஜித். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது .

இந்தப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக தமிழ் சினிமா 90களில் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி சமீபத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஸ்டைலிஷ் ஹீரோவுக்கு ஸ்டைலிஷான வில்லன் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
Ajith
தற்போது இந்தப் படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

விக்னேஷ் ஷிவனிடம் கதை கேட்ட அஜித் கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்தால் சரியாக இருக்கும் அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் மேலும் அஜித் சந்தானத்திற்கு போன் செய்து இந்தப் படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Ajith
தற்போது கிக் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏகே 62 பட குழுவினருடன் இணைய இருப்பதாக செய்திகள் வருகிறது.