மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிக்ஜாம் புயல் சத்தமே இல்லாமல் உதவி செய்த அஜித்குமார்.!
சமீபத்தில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னைவாசிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு தமிழக அரசும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு விதத்தில் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அதேபோன்று ஹரிஷ் கல்யாண், கார்த்தி, சூர்யா பார்த்திபன் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கும் பணிகளை செய்து வருகிறார்கள். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், நடிகர் அஜித்குமார் இது போன்று பொதுமக்களுக்கு செய்யும் உதவிகள் எதுவும் வெளியே தெரிவதில்லை. தான் செய்யும் உதவி வெளியே தெரியக்கூடாது என்பதில் அஜித் கண்ணும், கருத்துமாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
இந்நிலையில் தான், பலர் அஜித் இந்த விவகாரத்தில் யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க தொடங்கி விட்டனர். ஆனாலும், நடிகர் அஜித்குமார் தன்னுடைய நண்பர்கள் மூலமாக சத்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. ஆகவே அவருடைய ரசிகர்கள் அஜித் தான் செய்யும் உதவி எப்போதும் வெளியே தெரியக்கூடாது என்று நினைப்பார் என தெரிவித்து வருகிறார்கள்.