மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவர்தான் நடிகர் கவுண்டமணியின் மகளா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. அவர் இறுதியாக வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த அவர் தற்போது பழனிச்சாமி வாத்தியார் மற்றும் ஒத்த ஓட்டு முத்தையா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் கவுண்டமணியின் காமெடிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி. அவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமித்ரா அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தனது கணவருடன் சென்று உதவிகளை செய்து வருகிறாராம்.