மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கவுண்டமணியின் உடல்நிலைக்கு என்னதான் ஆச்சு! வெளிவந்த உண்மையால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனது வித்தியாசமான உடல் பாவனைகளாலும், காமெடியாலும் ஏராளமான ரசிகர்களை பெற்று முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் காமெடிக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் கவுண்டமணி அவர்கள் செந்திலுடன் இணைந்து நடித்த வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுகிறது. அவர் தற்போது பல காமெடி நடிகர்களுக்கு ரோல்மாடலாக உள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக 80 வயது நிறைந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் பரவியது. இதுகுறித்து அறிந்த நிலையில் கவுண்டமணி மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கவுண்டமணி தரப்பில் கூறியதாவது, இவ்வாறு வதந்திகளை பரப்புவதே சிலரது வேலையாக உள்ளது. அவர் வீட்டில் நலமாக இருக்கிறார்.அடுத்த பட வேலைகளில் ஆர்வமாக, தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.