மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன்முறையாக வெளியான நடிகர் கலையரசனின் மனைவி, குழந்தையின் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்தவர் நடிகர் கலையரசன். இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
மேலும் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் வென்றார். பின்பு உறுமீன், கபாலி, டார்லிங், அதே கண்கள், தானா சேர்ந்த கூட்டம், ஐரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது சீனா, டைட்டானிக், முகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கலையரசன் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பாக ஐடி துறையில் வேலை பார்த்துள்ளார். அப்போது தனது மனைவி சண்முகப்பிரியா மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துள்ளார். தற்போது குழந்தையுடன் இருக்கும் அவர்களின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.