விஜய், விஜயகாந்த் பட பிரபல மிரட்டல் வில்லன் நடிகர் திடீர் மரணம்.!



Actor kasaan khan dead by heart attack

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகர் கசான் கான். இவர் தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ் பாட்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சேதுபதி ஐபிஎஸ், முறைமாமன் மேட்டுக்குடி, வல்லரசு, பிரியமானவளே, பத்ரி என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் கசான் கான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம, கன்னடம் மொழி படங்களிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் நடிகர் கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Villain actor

இதனை மலையாள சினிமா தயாரிப்பாளர் என்எம்.பாதுஷா உறுதி செய்துள்ளார். இந்த தகவல் பரவிய நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.