#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாமி பட வில்லன் நடிகரா இது.! தள்ளாடியபடியே வாக்களிக்க வந்த கோட்டா சீனிவாச ராவ்.! வைரல் வீடியோ!!
தெலுங்கில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பிராணம் கீரகிடு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் 2003ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சாமி படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றும் பேசப்படுகிறது.
கோட்டா சீனிவாசராவ் படங்கள்
தொடர்ந்து அவர் தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், தனம், பெருமாள், ஜகன் மோகினி,கோ, சகுனி, தாண்டவம், ஆன் இன் ஆல் அழகுராஜா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில சட்டமன்ற உதவி உறுப்பினராக இருந்தார். இவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு 2015 ஆம் ஆண்டிற்கு பத்மபூஷன் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.
இதையும் படிங்க: 'நிக்கிறேன்... உங்கள எதிர்த்து நிக்கிறேன்'.! ரசிகர்களை கவர்ந்த எலக்சன் ட்ரைலர்.! எப்படியிருக்கு பார்த்தீங்களா!!
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தளர்ந்த நடையோடு, தள்ளாடியபடி வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அவரை உறவினர் ஒருவர் கைதாங்கலாக அழைத்து வந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Senior actor Kota Srinivasa Rao garu 🗳️#APElections2024
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 13, 2024
pic.twitter.com/Uh23nPR57L
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைக்க அச்சுறுத்தல்.. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன் - பிரேமலதா விஜயகாந்த்!