அச்சச்சோ.. நான் இறந்துவிட்டேனா?.. சாமி பட நடிகர் சீனிவாசராவ் வீடியோ வெளியிட்டு விளக்கம்.! 



Actor kotta srinivasarao video

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகருமான ராவ் மறந்துவிட்டதாக செய்திகள் வெளியானதுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சீனிவாசராவ். இவர் தமிழில் மாசி, சகுனி, மம்பட்டியான், கோ, சாமி, அம்பாசமுத்திரம் அம்பானி, சத்யம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

Actor srinivasarao

இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில் சட்டப்பேரவைக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். தற்போது 80 வயதாகும் சீனிவாச ராவ் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் கோட்டா சீனிவாசராவ் வயது மற்றும் உடல்நலக்குறைவால் பல செய்திகள் பரவவே, அதுகுறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த கோட்டா சீனிவாசராவ் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.