வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
புத்தாண்டு வாழ்த்து சொல்லவில்லை; பெற்றோரை இழந்த மாணவி தற்கொலை.. விடுதி அறையில் சோகம்.!
தன்னுடன் பயிலும் சக மாணவி, புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லவில்லை என மாணவி தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் அனந்தபுரில் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம், பெல்லாரி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், திப்பம்மா என்ற மாணவி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறார்.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... ஒரு தலை காதல் கொடூரம்.!! 17 வயது சிறுமி எரித்து கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!
மாணவிக்கு தாய் - தந்தை என யாரும் இல்லாத நிலையில், அவருடன் தோழி ஒருவர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரின் பெற்றோர் விபத்தில் தவறிவிட, மாணவி தனியாக இருக்கிறார்.
மாணவி தற்கொலை
இதனிடையே, மாணவியுடன் தங்கியிருக்கும் வேறொரு மாணவி ஒருவர், புத்தாண்டு வாழ்த்து சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சடலமாக கிடந்த மாணவி குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், திப்பம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாய் பெஸ்டி பேச்சைக் கேட்டு மனைவி விபரீதம்: கண்களில் மிளகுபொடித்தூவி, கல்லால் அடித்தே கணவன் கொலை..!