வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தேங்காய் எண்ணெய் கொண்டு டெங்குவை விரட்டலாமா.? சித்த மருத்துவம் சொல்வதென்ன.?!
எண்ணெய் பிசுபிசுப்பு கொசுவை விரட்டும்
முழங்கால்களுக்கு கீழ் தேங்காய் எண்ணெயை தடவினால் டெங்கு காய்ச்சல் வராது என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த செய்தி முற்றிலும் போலியானது. முழங்கால்களுக்கு மற்றும் கைகளில் தேங்காய் எண்ணெயை பூசி கொள்வதால் அந்த வாசனை பிடிக்காமல் கொசு அருகில் வராமல் இருக்கும்.
கசாயங்கள்
மற்றபடி டெங்கு காய்ச்சலுக்கு அது நிரந்தர தீர்வு இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் மலை வேம்பு கசாயம், பப்பாளி சாறு மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றின் சாறுகளை 10 மில்லி குடிப்பதால் ஆரம்ப நிலையில் இருக்கும் டெங்குவை குணப்படுத்த முடியும்.
டெங்கு மருந்துகள்
ஆடாதோடா இலை சாறு மற்றும் அமுக்குரா சூரணம் போன்றவை டெங்குவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் ஆகும். பொதுவாக டெங்குவிற்கான அறிகுறி ஒவ்வொரு நபருக்கும் மாறி மாறி வருகிறது.
நிலவேம்பு கசாயம்
எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் டெங்குவை எதிர்கொள்வது மிக கடினம். அது தவறும் கூட. நிலவேம்பு கசாயத்தை எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ஒரு நோய் தடுப்பு மருந்தாக செயல்படும்.