மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் செய்த அசத்தல் சாதனை! குவியும் பாராட்டுக்கள்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். கூட்டு குடும்பம், அண்ணன் , தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் குமரன்.
இத்தொடரில் இவரது அமைதியான குணம் மற்றும் அழகான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கதிர் முல்லை காதல் ஜோடிக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மேலும் கதிர் அசத்தலாக நடனமாடக் கூடியவர்.இவர் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்று நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் நடனம், நடிப்பு என இரண்டிலும் மாஸ் காட்டி வரும் இவர் 2021 ஆம் ஆண்டுக்கான 𝗙𝗔𝗕 𝗦𝗧𝗔𝗥𝗦 𝗜𝗖𝗢𝗡𝗜𝗖 𝗔𝗪𝗔𝗥𝗗 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
இது குறித்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட அவர் கூறுகையில் “நாம ஜெயிச்சா ஆடப்போறதில்ல தோத்துட்டா வாடிரப்போறதில்ல எண்ணம்போல் மட்டுமே வாழ்க்கை” என பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.