70 வயதில் இப்படி ஒரு சிக்கலா?? நடிகர் மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்..



Actor mammootty corona test positive

நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் மெகா ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. மலையாளம், தமிழ், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு, இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த தளபதி திரைப்படம் இன்றுவரை பிரபலம்.

Mammooty

தற்போது 70 வயதாகும் இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.