மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் முரளி பற்றி யாரும் அறிந்திராத சோக கதை! கடனாளியானதன் பகீர் பின்னணி!
எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் முரளி. பூவிளக்கு என்றால் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் முரளி. கலராக இருந்தால்தான் ஹீரோவாக முடியும் என்பதை தாண்டி ரஜினி, விஜயகாந்த் பாணியில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் முரளி.
ஆக்சன் படங்களை விட எதார்த்தமான படங்களில் நடித்து பெண்களின் மனதை கவர்ந்தவர். இவரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு மிகுந்த சோகமாகும். இவரது மகன் அதர்வாவும் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக ஜொலித்து வருகிறார்.
நடிகர் முரளியின் கடைசிகாலம் சோகத்திலையே முடிந்துள்ளது. வழக்கமாக நடிகர்களின் கடனுக்கு காரணம் சொந்த படம் எடுத்து தோல்வி அடைவது, அல்லது தவறான பழக்கவழக்கங்களாக இருக்கும்.
ஆனால் வித்தியாசமான முறையில் கோடி கணக்கான கடனில் சிக்கி தவித்துள்ளார் நடிகர் முரளி. அதவாது இவர் நடித்த படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க சொந்த பணத்தை கொடுத்துள்ளார். இதனால் பல கோடி கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.