மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. ஹனிமூன் சென்ற இடத்தில் காதல் மனைவியுடன் ரொமான்ஸ் ஆட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகர்! வைரல் வீடியோ!!
தற்காலத்தில் சினிமா ஹீரோ, ஹீரோயின்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் பெருமளவில் பிரபலமடைகின்றனர். மேலும் செய்திவாசிப்பாளர்களும் தங்களது அழகால், தமிழ் உச்சரிப்பால் பலரையும் கவர்ந்து வருகின்றனர். மேலும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
அவ்வாறு ரசிகர்களை கவர்ந்த செய்தி வாசிப்பாளர் கண்மணி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருக்கும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இதயத்தை திருடாதே ஹீரோ நவீனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கண்மணி நவீன் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர், இதை நவீனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அங்கு இளம் புதுமண ஜோடி இருவரும் கியூட்டாக ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.