மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம மாஸ்... தளபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா..! வைரல் வீடியோ...
நடிகை நஸ்ரியாவின் தளபதி பாடல் குத்தாட்டம் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவான நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஷ்ரியா.
அதனைத் தொடர்ந்து தனுஷ்சுடன் நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார். கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
பின்னர் இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகர் பகத் பாசிலை விட நஸ்ரியா 12 வயது சிறியவர் ஆவார். தற்போது குடும்பம், பிசினஸ் என குடும்ப வாழக்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸ் குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.