மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒருவழியாக தனது காதலியை கரம்பிடிக்கிறார் பிரபல முன்னணி இளம்நடிகர்! மணப்பெண் இவர்தானா! வைரலாகும் கியூட் புகைப்படம்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிதின். இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் புகழ்பெற்று விளங்குகிறார்.
இந்நிலையில் நடிகர் நிதின் ஷாலினி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருகுடும்பத்தினரும் பச்சைகொடி காட்டிய நிலையில் திருமணம் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மேலும் இதற்காக துபாயில் கோலாகலமாக ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதுவும் செய்யமுடியாமல் போனது.
Aaaand ENGAGED!! ❤️❤️❤️ pic.twitter.com/MqqbRo2HsS
— nithiin (@actor_nithiin) July 22, 2020
இதையடுத்து, சமீபத்தில் ஹைதராபாத்தில் ஷாலினி மற்றும் நிதினுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில், இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனை தொடர்ந்து இருவருக்கும் ஜுலை 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் திருமணம் நடக்கவுள்ளது.
இந்த திருமணத்துக்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.