மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு இப்படியொரு பிரச்சினையா?? கால் கட்டை விரல் அகற்றம்!!
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பல படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் மாயி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த வாமா மின்னலே காமெடி இன்றளவும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
மேலும் அவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் ஐந்து ஆண்டுகளாக பெயிண்டர் வேலை செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் திருமண நிகழ்வுகளில் பீடா மடித்து கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமான நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாவா லட்சுமணனுக்கு நோயின் தாக்கத்தால் காலில் கட்டைவிரல் அகற்றப்பட்டுள்ளதாம்.