அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ப்ளீஸ்.. அவரை காப்பாற்ற உதவுங்க! ஐசியுவில் உயிருக்கு போராடும் நடிகர் போண்டாமணி.! கதறி அழுது பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த 'பவுனு பவுனுதான்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இலங்கையைச் சேர்ந்த நடிகர் போண்டாமணி. அதனை தொடர்ந்து அவர் சிறு கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் சில டிவி தொடர்களிலும், கேம் ஷோக்களிலும் பங்கேற்றார்.
நடிகர் போண்டாமணி கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாம். இதுகுறித்து உதவி கேட்டு சக நடிகரான பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், அண்ணன் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காணொளியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேலற்சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்.
நாடுவிட்டு நாடு வந்து இலங்கையில் இருந்து தமிழகtத்தில் தஞ்சம் புகுந்து பல போராட்டங்களுக்குப் பிறகு சினிமாதுறையில் நடிகராகி, பின் திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்று அவர்களை படிக்கவைத்து ஆளாக்கி வருகிறார். அவரை நம்மால் முடிந்த உதவிகளை செய்து காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ கூறி அண்ணன் போண்டாமணியை காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர் குழந்தைகளை விட்டுவிட்டு அனாதையாகவே போய்விடகூடாது. தயவு செய்து உதவி பண்ணுங்க என கண்ணீர் விட்டு அழுதபடி கேட்டுள்ளார்.