மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் பிரசன்னாவிற்கு என்னாச்சு! ஏன் இப்படி ஆகிட்டாரு.! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. அதனை தொடர்ந்து அவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், மேலும் சமீபகாலமாக அவர் சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நடிகர் பிரசன்னா எப்பொழுதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருபவர். இந்நிலையில் தொப்பை மற்றும் நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் இருக்கும் பிரசன்னாவின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் பிரசன்னா தற்பொழுது ஜீ5 என்ற நிறுவனம் தயாரித்து வரும் திரவம் என்ற வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் மூலிகை பெட்ரோல் தயாரிக்க முயற்சி செய்து வரும் ராமர் பிள்ளையின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ராமர் பிள்ளை கதாபாத்திரத்தில் பிரசன்ன நடித்து வருகிறார் அதனாலே அவர் அத்தகைய தோற்றத்தில் உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.