மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் வாய்ப்பை இழந்தேன்... பிரபல நடிகர் வருத்தம்!
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார். படம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி நடந்துவருகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும், ஆனால், ஒருசில காரணங்களால் அதை ஏற்க முடியாமல் போனது பற்றியும் நடிகரும், இயக்குனருமான பிரிதிவிராஜ் கூறியுள்ளார். தமிழில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர் சமீபத்தில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
ரஜினியை இயக்க வாய்ப்பு வந்தும் அதை தவறவிட்டதை நினைத்து தான் வருந்தியதாகவும், ரஜினிகாந்திற்கு ஒரு பெரிய விளக்கக்கடிதம் எழுதியதாகவும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.