மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த விஜய் டிவி பிரபலத்தின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? கடைசி ஆசை கூட நிறைவேறவில்லையே!!கதறி அழுத நடிகரின் மனைவி!!
தமிழ்சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராஜசேகர். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர் இயக்குனராக களமிறங்கினார். பின்னர் பாலைவனச்சோலை, சின்ன பூவே மெல்ல பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்த அவர் சமீபத்தில் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல சீரியல்களில் தனது கலகலப்பான கதாபாத்திரத்தின் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பிரபலமானார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜசேகர் நேற்று உயிரிழந்தார். இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது இழப்பு குறித்து அவரது மனைவி தாரா கூறுகையில், எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது நான்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனி மனுஷியாக கவனித்துக் கொண்டேன். என்னால் மருத்துவமனையில் பணம் கட்ட முடியாமல், அவதிப்பட்டு வந்தபோது தொலைக்காட்சி தொடர் இயக்குனர் விக்ரமாதித்யன் பணம் கட்டி சிகிச்சைக்கு உதவினார்.
அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இயக்கியுள்ளார் என்ற பெருமை இருந்தாலும் பணத்தை சேர்க்கவில்லை. மேலும் பல வருடங்களாக வாடகை வீட்டில் இருந்த அவருக்கு இறப்பதற்கு முன்பு சொந்த வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் சிறிய பிளாட் வாங்கினோம். அதில் கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறுவதற்கு முன்பே இப்படியாகிவிட்டது. அவரது கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை என கதறி அழுதுள்ளார்.