மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க கேம் இனிமேதான்.. கெத்தாக மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் ராமராஜன்!! டீசரே சும்மா தெறிக்கவிடுதே!!
80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் பெற்று வசூலை அள்ளி தந்தது. கடைசியாக நடிகர் ராமராஜன் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மேதை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
பின்னர் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து அவருக்கு வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தவண்ணம் இருந்தது. ஆனால் அவர் அதனையெல்லாம் மறுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். நடிகர் ராமராஜன் ராஹேஷ் இயக்கத்தில் உருவாகும் சாமானியன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.