மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவோட அந்த பழக்கம்தான் எல்லாத்துக்கும் காரணம்; யாரும் அப்படி பண்ணாதீங்க - உருக்கத்துடன் ரோபோ சங்கர் மகள் பேட்டி..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி, மாரி திரைப்படம் மூலமாக வெள்ளி திரைக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ரோபோ சங்கர்.
இவர் ரஜினி, அஜித், தனுஷ், சந்தானம் உட்பட பல நடிகர்களுடன் நடித்து வந்தார். இதனிடையே உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் உடல் நலக்குறைவுக்கு என்ன காரணம்? என்று பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. பலரும் குடிப்பழக்கம் காரணமாகவே அவரது உடல்நிலை கேடானதாக தெரிவித்தனர்.
சர்ச்சை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனும் அதனை கூறினார். இதற்கிடையில் மஞ்சள் காமாலை காரணமாக தனது உடல் நலம் மோசமானதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் குடியின் காரணமாக மஞ்சள் காமாலையால் ஆட்கொள்ளப்பட்டதாகவும் பேசப்பட்டது.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் மற்றும் நடிகை இந்திராஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கடந்த சில மாதமாகவே அப்பா மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.
அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் மதுவை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
"மதுப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடானது"