மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... செம கியூட்! நடிகர் சதீஷின் மகளை பார்த்து இருக்கீங்களா! வைரலாகும் அழகிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சதீஷ். தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். நடிகர் சதீஷ்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது அவர் நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.
நடிகர் சதீஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நிஹாரிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சதீஷ் தம்பதியினர் குழந்தையுடன் தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் குழந்தை கியூட்டாக இருப்பதாக கூறி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.