மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீமராஜா தோல்வியால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை! கடைசில இப்படி ஆயிடுச்சே!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டர் சிவா.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அவரது படங்களிலேயே இந்த படம்தான் வசூல் குறைவு. சீமராஜா தோல்வியால் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளாராம் நடிகர் சிவா. மேலும் தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவும் மிகப்பெரிய கடன் சுமையால் தவித்து வருகிறார்.
சீமராஜா மற்றும் வேலைக்காரன் படத்தின் தோல்விதான் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. வேலைக்காரன் படத்தில் போடப்பட்ட செட்டும், சீமராஜ படத்தில் வைக்கப்பட்ட பிளாஸ்பேக் காட்சிகளும்தான் இந்த கடன் சுமைக்கு காரணமாம். பிளாஸ்பேக் காட்சிக்காக மட்டும் 8 கோடிகளுக்கு மேல் செலவு செய்தார்களாம்.
இதனால் தற்போது குறைந்த செலவில் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயனும் அவரின் ஆஸ்தான தயாரிப்பாளரும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்கள் இந்த நிலையில் இரும்புதிரை திரைப்படத்தின் இயக்குனர் மித்திரன் இயக்கத்தில் ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்க முடிவு செய்துள்ளார்கள் இந்த படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவந்த சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறாராம். மீண்டும் சிறிய பட்ஜெட் படத்தில் சிவா நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.