மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. கியூட் பேமிலி! நடிகர் சிபிராஜின் மனைவி மற்றும் மகன்களை பார்த்துருக்கீங்களா.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
80, 90 காலகட்டத்தில் வில்லனாக, ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும் மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிபிராஜ் பல வித்தியாசமான கதைக்களத்தில், காதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் தனது தந்தையுடன் இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளிவந்த மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் சிபிராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிபிராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் கியூட் குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.