மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிபிராஜின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பாத்துருக்கீங்களா? இதோ!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகன்தான் சிபிராஜ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 2003 ஆம் ஆண்டு, இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவானார் நடிகர் சிபிராஜ்.
அதன்பின்னர் ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல் போன்றபடங்களில் நடித்துள்ளார் சிபிராஜ். கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ரங்கா, மாயோன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார் சிபிராஜ்.
இந்நிலையில் சிபிராஜுக்கும், ரேவதி என்ற பெண்ணிற்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரேவதி சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சிபிராஜும், ரேவதியும் திருமணத்திற்கு முன்பே சுமார் 10 வருடம் நண்பர்களாக இருந்தவர்கள்.
10 வருட நண்பர்களான இவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ புகைப்படம்.