மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்த மகிழ்ச்சிக்கு காதல் மட்டும் தான் காரணம்" அதிதி ராவின் புகைப்படத்தை பதிவிட்ட சித்தார்த்.! ரசிகர்கள் குழப்பம்..
ஷங்கரின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு "பாய்ஸ்" படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். இவர் முன்னதாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து இவர் காதலில் சொதப்புவது எப்படி, ஆயுத எழுத்து, 180, உதயம் NH 4, தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த "சித்தா" திரைப்படம் 20கோடி அளவில் வசூலித்து நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இவ்வாறு பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சித்தார்த் பிரபல நடிகையும், அரச வம்சத்தை சேர்ந்தவருமான அதிதி ராவுடன் பொது இடங்களில் சுற்றி வருவதால், இருவரும் காதலிப்பதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் சித்தார்த் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிதியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு, "இந்த மகிழ்ச்சிக்கு காதல் மட்டும் காரணம்" என்று பதிவிட்டுள்ளார். அதிதி ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.