மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வட சென்னை படம் பாத்துட்டு நடிகர் சிம்பு என்ன செய்துள்ளார் தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வட சென்னை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் வட சென்னை படக்குழுவினர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
வட சென்னை படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று வெளியாகி இருக்கிறது.
வட சென்னை பற்றி நடிகர் சிம்பு கூறியிருப்பதாவது ‘அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.