மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீயா வேல செய்வாரா குமாரு?.. மீண்டும் காதலில் விழுந்த சித்தார்த்..! இதாவது கரைசேருமா?.!
நடிகர் சித்தார்த் மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து வரும் நிலையில், இதாவது நிலைக்குமா? இல்ல பிச்சுக்குமா? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பலமொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
மேலும், இவர் ஆயுத எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காதலில் சொதப்புவது எப்படி மற்றும் காவியதலைவன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது இவர் நடிகை அதிதிராவ் ஹைதாரியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த் 2002இல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மேக்னா என்ற பின்னணி பாடகியை காதலித்து திருமணம் செய்த நிலையில், ஒரு மகன் பிறந்தபின் விவாகரத்து செய்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அடுத்து நடிகை ஸ்ருதிஹாசனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பிரிந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்போதைய புதுவரவான சமந்தாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை சேர்ந்து, பின் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகை அதிதி ஹைதாரியை, காதலிக்கும் சித்தார்த் மும்பையில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் பொதுவெளியில் சுற்றியபோது மீடியாக்களிடம் பிடிபட்ட சித்தார்த் நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தான் காதலிப்பதை உறுதி செய்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் இதாவது நிலைக்குமா? அல்லது பாதியில் பிச்சுக்குமா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.