மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் வழங்கினார் நடிகர் சூரி.!
சென்னை நகரை கடந்த டிசம்பர் 03 மற்றும் 04ம் தேதிகளில் புரட்டியெடுத்த புயல் மழை காரணமாக, தலைநகரில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் தேங்கி மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
தற்போது நகர மக்களின் இயல்பு நிலை திரும்ப தொடங்கிவிட்டது எனினும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து தொண்டுள்ளம் கொண்டோர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண பணிகளுக்காக அரசுக்கு நிதி தந்து உதவுமாறு கோரிக்கை வைத்தது. அதன்பேரில் ஆளும்-எதிர் கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், திரையுலகினர், தொழிலதிபர்கள் அரசிடம் நிதிஉதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திரைத்துறையில் உழைப்பால் முன்னேறிய நடிகர் சூரி, தனது சார்பில் நிவாரண பணிகளுக்காக ரூ.10 இலட்சம் வழங்கினார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சூரி நேரில் வழங்கினார்.