மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹாலிவுட்டில் களமிறங்கிய நடிகர் சூர்யா.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!
1997ம் ஆண்டு "நேருக்கு நேர்" படத்தில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, ஆயுத எழுத்து, கஜினி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் "புறநானூறு" படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா "கர்ணா" என்ற பேன் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மேலும் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.