மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது சரிப்பட்டு வராது.! புது சிக்கலால் ரூட்டை மாத்தி நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துவருகின்றார்.
2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக உருவாகும் இப்படம் மீனவர்களின் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகிறது. இதன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என கூறப்படுகிறது.
அதனால் சூர்யா அதற்கு முன்பாக ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் குறுகிய கால தயாரிப்பில் உருவாகிறதாம். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.