ஜோதிகாவை சிவகுமார் ஒருமையில் பேசினாரா?. விதார்த் கூறியதை விவாதமாக்கிய நெட்டிசன்கள்.!! 



actor-vidharth-about-jyothika

 

புஷ் புஷ் திரைப்படத்தில் மூலமாக தமிழுக்கு அறிமுகமான நடிகை ஜோதிகா. இந்தி திரையுலகில் முதலில் நடிக்க தொடங்கி பின் வாலி படத்தின் மூலமாக அறிமுகமானவர் நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சினேகிதியே, குஷி, பூவே உன் வாசம், மன்மதன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

cinema news

காக்க காக்க திரைப்படத்தின் போது ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து சூர்யா -ஜோதிகா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சூர்யாவின் தந்தையான சிவகுமாருக்கு எள்ளளவும் விருப்பமில்லை என்றும், தனது ஜாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்று சிவகுமார் வருத்தப்பட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 

இந்நிலையில் காற்றின் மொழி திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக பேசிய விதார்த், "நான் முதலில் ஜோதிகா மேடம் உடன் நடிக்க பயந்தேன். அந்த சமயத்தில் சிவகுமார் சார் என்னிடம் வந்து ஜோதிகா (அவ) ஒரு பொம்பள சிவாஜி, அவ பயங்கரம் டா என்று கூறினார். அதன்பின் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா பெரிய நடிகை என்ற தலைக்கனம் இல்லாமல் நன்றாகவே என்னிடம் பழகினார்" என்று தெரிவித்தார்.

cinema news

இதுகுறித்த வீடியோ வெளியாகவே பலரும் என்னது? சிவகுமார் ஜோதிகாவை ஒருமையில் பேசினாரா?, ஜோதிகாவுக்கு தலைக்கனம் இருக்கா? இல்லையா? என்ற விவாதத்தை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த சிலர் அவர் இயல்பாக கூறிய ஒன்றை வைத்து சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்று விவாதத்தை முடித்தனர்.