மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விஜய்க்கு பிடித்த நடிகை நான்தான், எனக்கு பிடித்த நடிகர் விஜய் தான்" பிரபல நடிகையின் தீயாய் பரவும் பேட்டி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் தமிழில் 90களின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இளைய தளபதி எனும் பெயர் பெற்றுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியவர் இளைய தளபதி விஜய்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியானது லியோ திரைப்படம். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்திற்கு பின்பு தற்போது the greatest of all time என்ற திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகராக இருந்து வரும் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். இதனால் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இச்செய்தி அறிந்து ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.
இது போன்ற நிலையில் நடிகர் விஜய் மற்றும் அசினின் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தொகுப்பாளர் நடிகை அசினிடம் விஜய்க்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு உடனடியாக நான்தான் என்று கூறுகிறார். விஜய்யிடம் கேட்டதற்கு அசின் தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய்க்கு பிடித்த நடிகை அசின் தானா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் விஜய் மற்றும் அசின் இணைந்து பல ஹிட் திரைப்படங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.