#BeastMovie: பீஸ்ட்டுக்கே புளிப்பு மிட்டாய்.. ஷாக்கில் ரசிகர்கள்.. தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக்.!

பலகோடிகள் செலவு செய்து திரைப்படங்களை எடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும், படத்தை வாங்கும் விநியோகிஸ்தர்களும் இந்த ஒற்றை பெயரை கேட்டால் பதற்றத்தான் செய்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் படங்கள் முதல் கோடிகளில் தயாரிக்கும் படம் வரை அனைத்தும் பாரபட்சமின்றி இவர்களால் இணையங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, வி.டி.வி கணேஷ் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் படம் இன்று வெளியாகியுள்ளது.
படம் வெளியாகுவதற்கு முன்னதாகவே பல்வேறு விமர்சனத்தை பெற்ற நிலையில், வெளியானதும் சுறா + புலி கலவையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் ராக்கர்ஸ் எனப்படும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பு குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திரைப்படங்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பீஸ்ட் திரைப்படம் முதல் நாளிலேயே வெளியாகியுள்ளது.