"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
அப்பாவை போல உருவத்தில் அப்படியே இருக்கும் நடிகர் பிரபுதேவா மகன்! இணையத்தில் அவரே வெளியிட்ட வீடியோ இதோ..

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமைகளை கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக திகழ்பவர் பிரபுதேவா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளது.
இந்நிலையில் பிரபுதேவா தனது நடனகுழுவில் பணியாற்றி வந்த ரமலத் என்ற பெண்ணை காதலித்து 1995-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உடல்நல குறைவால் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்டார். பின்னர் கடந்த 2011-ல் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது.
தற்போது பிரபுதேவா முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பிரபு தேவா சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய்டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென நடந்த விபத்தில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட்.....வைரலாகும் வீடியோ காட்சி....
அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி வீடியோ மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை இணையத்தில் பார்த்த அவரது ரசிகர்கள், “அடுத்த பிரபு தேவாவா இவர்? அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.